tamilnadu

img

நிவாரண உதவிகளுக்கு புதிய செயல் திட்டம் தீட்டுக!

தமிழக அரசுக்கு திமுக - தோழமைக் கட்சிகள் கூட்டம் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.16- கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத் திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் நிவாரண உதவிகளுக்கு புதிய செயல் திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றும் சென்னை யில் திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (ஏப்.16) தனது தோழமைக் கட்சிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் தனி மனித இடை வெளியுடன் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டி ருந்தபோதும் காவல் துறை தடை விதித்த காரணத் தால் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல் பாடுகள் குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர் கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்திற்குப் பின்னர் தீர்மானங்களை விளக்கி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத் திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியா ளர்களுக்கும் சிறப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும். பணியின் போது உயிரிழக்க நேரிடும் ஒவ்வொரு ஊழியரின் குடும் பத்திற்கும் தற்போது அரசு அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மிக மிக குறைவு என்ப தால் - ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை அரசியல் நோக்கத்துடன் அரசு தடுக்க முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து திமுக வின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனை பின்பற்ற அரசு ஒத்து ழைக்க வேண்டும். உதவும் கரங்களுக்கு வலு சேர்த்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும். விவசாயப் பொருட்களுக் கான கொள்முதலை தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

நோய்த் தொற்றினால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்; இந்த நோயால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பரிவுத் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

சிறப்பு ஊதியம்

வரலாறு காணாத இந்தக் கொடிய நோயின் கோரப் பிடியிலிருந்து மக்களை மீட்டுப் பாது காக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்து வப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், கூட்டுறவுப் பணி யாளர்கள், காவல்துறையினர் என தங்களின் இன்னுயிர் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளா மல் தன்னலமற்ற சேவை புரிந்து வருவோருக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலை யிலும், மருத்துவ உபகரணங்களுக்காகவும், நோய் கண்டறியும் கிட்ஸ்களுக்காகவும் தமிழக அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து கால வரை யறையின்றிக் காத்திருப்பதும் - அதை மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பதும் மிகுந்த கவலை யளிக்கிறது. ஆகவே தமிழகத்திற்குத் தேவை யான மருத்துவ உபகரணங்களை, போர்க்கால அடிப்படையில் மாநில அரசே கொள்முதல் செய்ய வும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்டவற்றை உடனே பெறவும் மத்திய - மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் 

ஊரடங்கு காலத்தில் முதலமைச்சரின் கணக்குப் படி 35.89 லட்சம் அமைப்புசாரா தொழி லாளர்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மற்ற வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட வருமான, வாழ்வாதார இழப்பு, ஏழை - எளிய - நடுத்தர மக்கள் படும் இன்னல்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில் களுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு - இவற்றால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன் னேற்றத்திற்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து - பெரும் பின்னடைவு ஆகியவற்றை இந்த அரசு உரிய அளவு புரிந்து கொள்ளவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளை யும் ஒருங்கிணைத்து - கலந்தாலோசனை கூட் டத்தை நடத்தி - மத்திய அரசிடமிருந்து போதிய நிதி யைப் பெறுவதற்கும் - நோய்த் தடுப்புப் பணி களில் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுட னும் முனைப்புடனும் செயல்படுவதற்கும் கூடத் தாமதித்துத் தயங்கி நிற்கும் அ.தி.மு.க அரசின் செயலுக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது.

 ஊரடங்கினால் விவசாயிகள், மீனவர்கள், நெச வாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள் ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மேலும் கடுமை யாகப் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை ஈடுகட்ட அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் சிறப்பு நிவாரண உதவியாக வழங்கிட வேண்டும். ஊரடங்கினைச் சரியாக நடைமுறைப் படுத்திடும் வகையில் அனைவருக்கும் அத்தியா வசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கிட வேண்டும்.

மாநில அரசு கோரியுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக் கும் தலா 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்கு ஏற்ற நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டுமென்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் அனுமதித்து - உச்சநீதிமன்ற மும் அங்கீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை இரு வரு டங்களுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் இந்த ஜன நாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதி யை தத்தமது தொகுதியில் கொரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கும் - தொகுதியில் உள்ள மக்க ளின் பாதுகாப்பிற்காகவும் செலவிட அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஆகவே மத்திய அரசிடம் உள்ள மாநிலங்களின் நிலுவைத் தொகை, மாநில பேரிடர் நிதி, சுகாதார பேரிடருக்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி நிதி உள்ளிட்டவற்றை மட்டுமின்றி - தமிழ்நாடு கேட்கும் நிதியுதவிகளை, மாநிலங்களிடையே பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் - ஆளாத மாநிலங்கள் என்ற பாகுபாடு காட்டாமல், நியாயமான முறையில் அளித்திடவும், மற்றும் கோரும் கடன் தொகை, சிறப்பு மானியங்கள் போன்றவற்றை, அரசியல் லாப - நட்டக் கணக்குப் பார்க்காமல் வழங்கிட வும் மத்திய அரசு உடனடியாக முன்வந்து அனைத்து மாநில மக்களும் இந்திய மக்களே - ஒரு தாய்ப் பிள்ளைகளே - எமது மக்களே என்ற பரந்த சிந்தனை யுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட குழுவினரை மட்டும் தனிமைப் படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் சோதனை செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையை முழுமை யாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சிக்க லான சூழ்நிலையில் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்வது மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகும். இதுபோன்ற நோயின் பார்வையில் மனி தர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, நமது அணுகுமுறை இருக்க வேண்டும்.

கொரோனா நோய் பாதிப்பிலிருந்து கேரள மாநிலத்தை மீட்க அம்மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி - அதற்கான செயல் திட்டத்தைத் தயாரித்து, முற்போக்கான வழியில் செயல்படுத்தி, மாதிரி மாநிலமாக உருவாகி வரு கின்ற வேளையில்; தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காத மத்திய அரசை தட்டிக் கேட்கத் தைரியம் இல்லா மல் - யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போல், வெறும் 3,280 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை ஒதுக்கி விட்டு முற்றிலும் செயலி ழந்து நிற்பதற்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையை தெரிவித்து, மாநி லத்திற்குத் தேவையான நிதியை உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற வேண்டும் என்றும், ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதா ரத்தை இழந்து நிற்கும் அனைத்துப் பிரிவு மக்க ளுக்கும் தேவையான நிவாரண உதவிகளைச் செய்திடவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டிடவும் உடனடியாகக் குறைந்த பட்சம் முதல் கட்டமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான செயல் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

புதிய செயல் திட்டம் உருவாக்கிடுக!

அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள அனை வருக்கும், நலிவடைந்துள்ள சிறு, குறு தொழில் களுக்கும் தேவையான நிவாரண உதவிகள், சிறப்பு மானியங்கள் அளித்திடவும், மாநிலத்தில் தேக்க நிலையை எட்டி விட்ட தொழில் வளர்ச்சி யை மீண்டும் முடுக்கி விடவும், தேவையான ஒரு விரிவான “நிவாரண- பொருளாதார” உதவிக்கான செயல் திட்டத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது. ஊரடங்கின் போது பிடித்து வைத்த அனைத்து வாகனங்களையும் உடனடியாக விடுவிக்கவேண்டும்.

அனுமதி மறுத்ததற்கு கண்டனம்

ஊரடங்கையும், கொரோனா தொற்றையும் காரணம் காட்டி, தி.மு.க. தலைமையில் நடைபெற விருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குத் தடை விதித்திருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“ஊரடங்கு உத்தரவு தனக்கோ, தன் அமைச்சர்களுக்கோ, அ.தி.மு.க.,விற்கோ இல்லை; அது எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான்” என்ற அடிப்படையில் - சர்வாதிகார மனப் பான்மையுடன் முதலமைச்சர் செயல்படுவது, யாரா லும் ஏற்றுக் கொள்ளமுடியாத, ஆரோக்கியமற்ற அணுகுமுறை ஆகும். ஆகவே முதலமைச்சர், பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில்- அரசியலை நுழைக்காமல்- அனைத்துக் கட்சிகளை யும், பொதுநல அமைப்புகளையும், தொண்டு நிறு வனங்களையும் - அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் ஒரே நோக்கில், மக்கள் பணியாற்றிட வேண்டும் என்பன உள் ளிட்ட 9 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.


 

 

;